வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி

டிசம்பர் 06

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள விகிதமே தொடர்கிறது. அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமும், எஸ்எல்ஆர் 19.5 சதவீதமும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கூட்டத்திற்குப் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் 3-வது மற்றும் நான்காம் காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவீதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடி, கச்சா எண்ணைய் மீதான வரி குறைப்பு, பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு போன்றவற்றை செய்தால் நிதி பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...