ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தினகரனுக்கு ”குக்கர்” சின்னம் ஒதுக்கீடு


டிசம்பர் 07

ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தினகரன் தெரிவித்தார்.

ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்குத் தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆர்.கே. நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தைக் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். முடிவில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தினகரன் கேட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விசில் சின்னங்களும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தினகரனுக்குக் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது: எந்தச் சின்னம் ஒதுக்கியிருந்தாலும் நான் போட்டியிட்டிருப்பேன். இறுதியாகத் தாய்மார்கள் விரும்பும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் எனக்கு ஒதுக்கியுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...