மும்பையில் கைதான கொலைக் குற்றவாளி தஷ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்

டிசம்பர் 07

சென்னையில் தாயைக் கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸார் பிடியிலிருந்து தப்பியோடினார். 

சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தார். குன்றத்துாரில் 25 பவுன் நகைகளுக்காகப் பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவாகினார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, 5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று (டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து, அவரைத் தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்கக்கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்துச் செல்ல அனுமதித்த நீதிபதி, நவ.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகே போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினார். மும்பை போலீசாரின் உதவியோடு அவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...