தனியார் பேருந்துகளில் பாடல் மற்றும் திரைப்படங்களை திரையிடத் தடை - ஜன.,1 முதல் அமலாகிறது

டிசம்பர் 8

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் பாடல் மற்றும் திரைப்படங்களை திரையிடக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைதூரப்பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பொதுவாக, தனியார் பேருந்துகளைத் தான் அதிகம் விரும்புகின்றனர். தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்களுக்கு தனியார் பேருந்துகளின் மீது ஒரு மோகம் உள்ளது.

அதற்கு காரணம் விரைவாக செல்வது, பயணத்தின் போது படம் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதால் பயணக் களைப்பின்றி செல்லலாம் என்ற எண்ணம்தான். ஏனென்றால் அரசு பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதி நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி, தனியார் பேருந்துகளிலும் தொலைக்காட்சிகளில் படம் பார்ப்பது, பாடல்களை கேட்பது போன்ற வசதிகளை அனுபவிக்க முடியாது.

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் , அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சுமார் 7 ஆயிரம் பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்கள் நீக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...