சிகிச்சையில் இருந்த புற்றுநோயாளியை அழைத்து வந்து ஆணையரிடம் நில மோசடி புகார்

கோவை, டிசம்பர் 8

கோவையில் நில மோசடி தொடர்பாக மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியை அழைத்து வந்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி பாக்கியம்.பொங்கலூர் செட்டிபாளையம் பகுதியிலுள்ள அவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கோவில் நிலம் எனக் கூறி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரகுமார் என்பவர் ஏமாற்றி விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விற்பனை செய்த நிலத்திற்கான பணத்தையும், ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள மூன்று செண்ட் நிலத்தையும் அந்த நபர் மோசடி செய்து விற்றுள்ளார்.

கடந்த மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பணத்தை வழங்குமாறு கேட்ட பாக்கியத்தை அடித்து விரட்டியுள்ளார். ஏற்கனவே, புற்றுநோயால் பாதிப்படைந்து அவதிப்பட்டு வந்த பாக்கியம், சுந்தரகுமார் தாக்கியதால் மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை கணபதி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் பாக்கியத்தின் சகோதரரான ஆறுமுகம், புகார் அளிப்பதற்காக தனது சகோதரி பாக்கியத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தொடர்ந்து ஆணையர் பெரியய்யாவிடம் சம்பவம் குறித்து புகார் அளித்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்த படுக்கையாக உள்ள நோயாளியுடன் ஆணையர் அலுவகத்திற்கு புகார் அளிக்க வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...