ஜெ., கைரேகை குறித்த வழக்கை விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை

டிசம்பர் 8

தேர்தல் ஆணையப் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தது தொடர்பான வழக்கை விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையைத் தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சிறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சிறையில் அடைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை என விளக்கமளித்துள்ளார். மேலும், ஜெயலலிதாவுக்கு ஆதார் அட்டை உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தேவைப்பட்டால் கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். 

இதனிடையே, ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்க தடை விதிக்கக் கோரி ஏ.கே போஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா கைரேகை தொடர்பான ஆவணங்களைச் சோதனை செய்யவும், இந்த வழக்கை விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்குத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சரவணன் உள்பட வழக்கில் தொடர்புடைய 28 பேரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...