மும்பையில் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த் மீண்டும் கைது

டிசம்பர் 8 

மும்பையில் போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய கொலையாளி தஷ்வந்த், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தார். குன்றத்துாரில் 25 பவுன் நகைகளுக்காகப் பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவாகினார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தஷ்வந்த் நண்பர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, 5 நாட்கள் தலைமறைவாக இருந்த தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் புதன் கிழமை  (டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து, அவரைத் தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்கக்கோரி மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்துச் செல்ல அனுமதித்த நீதிபதி, நவ.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகே போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் நேற்று தப்பியோடினார். பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது, கை விலங்குடன் அவர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மும்பை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அனைத்துத் தகவலும் பகிரப்பட்டது. 

மும்பையில் உள்ள காவல் நிலையங்கள் தஷ்வந்த் புகைப்படத்துடன் உஷார்படுத்தப்பட்டது. பின்னர், மும்பையில் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்தேரி பகுதியில் தஷ்வந்தை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். அவரைத் தமிழகத்திற்கு அழைத்துவர மேலும் ஒரு தனிப்படை சென்னையில் இருந்து மும்பை விரைந்து உள்ளது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...