தமிழுக்கு வந்த சோதனை.! : கல்வெட்டை சாக்கடை மூடியாக பயன்படுத்தும் கோவை மாநகராட்சி

கோவை, டிசம்பர்.9 :

கோவையில் தமிழ் கல்வெட்டு ஒன்று பாதாள சாக்கடையை மூடுவதற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தமிழ் ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

அலட்சியம் என்பது பலரின் ரத்தக்கூறுகளிலும் குடியேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் இன்னும் கடமையும், பற்றுணர்வும் கொண்ட மக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு தாம் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது இந்த சம்பவம். 

கோவை கணபதி பேருந்து நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. 

மூடப்படாமல் இருந்த இந்த பாதாள சாக்கடையினை தமிழ் கல்வெட்டு ஒன்றை கொண்டு மூடி வைத்துள்ளனர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள். 

இந்த கல்வெட்டானது முருகபிரானின் பெருமைகள் குறித்து அருணகிரி நாதர் எழுதிய பாடல்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கல்வெட்டு கணபதி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும், தமிழ் மக்களின் உணர்வை மாநகராட்சி அதிகாரிகள் உதாசீனப்படுத்திவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...