புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்றம்

கோவை, டிசம்பர்.9: 

இன்று முதல் புரூக் பாண்ட் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர்.



கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது. 

இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூமார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. 



இதனால் பூமார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. விழாக்காலங்களின் போது பொதுமக்கள் பூமார்க்கெட் பகுதியில் அதிக அளவில் திரளும் போது அவ்வழியே வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

சமீபத்தில் கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற K.பெரியய்யா, மாநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.



ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த இரு தினங்களாக புரூக்பாண்ட் சாலையை புனரமைக்கும் பணி நடைபெற்றது.

இதற்காக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு புரூக்பாண்ட் சாலைக்கு வந்த மாநகர காவல்துறை ஆணையர் அந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றி திறந்து வைத்தார்.



இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்பட்டதை தொடர்ந்து, பூமார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கனிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...