துப்புரவுப் பணி செய்து எதிர்ப்பை காட்டும் மருத்துவ மாணவர்கள் : 12-ம் நாளாக தொடர்கிறது போராட்டம்

கோவை, டிசம்பர் 10

அரசு சாரா மருத்துவர்களை பணியமர்த்திய விவகாரத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு பணி செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கிடக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் மருத்துவர்கள்  பணியமர்த்தப்பட  வேண்டிய நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவையில் கடந்த நவம்பர் 29-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இந்த நிலையில், அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.  அதன்படி, நேற்று  நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கருப்பு நிற பலூண்களை பறக்கவிட்டும், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

12-வது நாளான இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தின் மூலம் அகற்றி அரசிற்கு  எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...