கோவை மாநகராட்சி நிலஅளவை ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றம்

கோவை, டிசம்பர் 11

கோவை மாவட்டம் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் நிலஅளவை ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இச்சேவையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கிவைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற (டிச.,11) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியின் நகர நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கவும், நிலப்பதிவேடுகளின் நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் இயலும். 

இந்த நகல்கள் மின்கையொப்பம் செய்யப்பட்டுள்ளதால் இதனை வங்கி மற்றும் சேவைகளுக்கு சமர்ப்பிக்க யாருடைய ஒப்பமும் பெற வேண்டாம். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நகர்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இணையவழி சேவையின் மூலமாக எளிதாகவும், விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை www.tn.gov.in/eservices என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...