மதுரை, நெல்லை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 12

மதுரை மற்றும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவோயிஸ்ட்கள் தரப்பில் வாதாடி வந்த மதுரை வழக்கறிஞர் முருகன், அதே வழக்கில் இணைத்துக் கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாகக் கோவையில் உள்ள 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். வழக்கறிஞர்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...