கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் முதலமைச்சர் இல்லம் முற்றுகையிடப்படும்: சாலை பணியாளர் சங்கம்

கோவை, டிசம்பர் 12

சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வரும் டிசம்பர் 20-ம் தேதி குடும்பத்துடன் முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை, திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் கோவை மாவட்ட சாலை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் அம்சராஜ் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். ஏழாவது ஊதிய மாற்ற அரசாணை ஒருநபர் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட சாலை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி வருகின்ற 20-ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தை குடும்பத்துடன் முற்றுகையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...