வரும் 13-ம் தேதி கோவை - சென்னை இடையிலான ரயில் சேவையில் மாற்றியமைப்பு

கோவை, டிசம்பர்  12

திருப்பூர் ரயில்நிலையத்தில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 13-ம் தேதி மட்டும் கோவை - சென்னை இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் விபரம் பின்வருமாறு :- (13-ம் தேதி (ஒருநாள் மட்டும்)) 

ரயில் எண் : 12675, சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ். அதிகாலை 06.10 மணிக்கு சென்னையில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டு, 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக 08.25-க்கு கிளம்புகிறது. 

ரயில் எண் : 12243, சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ். காலை 07.15 மணிக்கு சென்னையில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டு, 2 மணி நேரம் தாமதமாக 09.15-க்கு கிளம்புகிறது. 

ரயில் எண் : 22630, திருநெல்வேலி - டாடர் வாராந்திர ரயில். திருநெல்வேலியில் இருந்து 07.20 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டு, 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக 08.50-க்கு கிளம்புகிறது. 

ரயில் எண் : 12676, கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ். கோவையில் இருந்து பிற்பகல் 02.55 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டு, 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக மாலை 05.10-க்கு கிளம்புகிறது.

ரயில் எண் : 12244, கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்.  கோவையில் இருந்து பிற்பகல் 03.25 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டு, 2 மணி நேரம் தாமதமாக 05.25-க்கு கிளம்புகிறது. 

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...