சபரிமலை யாத்திரையை குழந்தைகள் பாதுகாப்பாக மேற்கொள்ள வோடாபோன் சார்பில் RFID அறிமுகம்


கோவை, டிசம்பர் 13

சபரிமலை தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக RFID என்னும் திட்டத்தினை வோடாபோன் அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் கேரளா காவல்துறையுடன் இணைந்து RFID என்ற டேக் அறிவித்துள்ள இத்திட்டம் சபரிமலை தீர்த்த யாத்திரை செல்லும்போது குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க உதவுகிறது.



இந்த டேக் பம்பாவில் 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு யாத்திரை ஆரம்பிக்கும் இடங்களில் கொடுக்கப்படும். குழந்தைகள் பம்பாவிலிருந்து சன்னிதானம் வரை இது அனுமதிக்கப்படும்.

சபரிமலையில் யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு கேரள மாநில காவல்துறை அறிவித்துள்ள இதனைப் பெற காவல்நிலையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இந்த RFID டேக் கொடுக்கப்படும். அதில் குழந்தையின் பெயர், குழந்தையின் உரிமையாளரின் பெயர், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் பிற தகவல்களும் அடங்கி இருக்கும். அசாதாரண சூழ்நிலையில் குழந்தை உரிமையாளரிடம் இருந்து தவறும் பட்சத்தில் இத்தகவலின் மூலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவர். 

மேலும், ஒவ்வொரு முறையும் RFID டேக் உடன் ரீடிங் போஸ்ட் கடக்கும்பொது லோகேசன் தகவல் உடன் பதிவு எண் அட்டையில் ஏற்றப்படும். இதனால், தற்போது குழந்தை எப்பகுதியில் உள்ளது என்பதையும் எளிதில் அறியலாம். 

இத்திட்டம், சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை செயல்படுத்தப்படவுள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...