ஆணவ படுகொலைக்கு எதிரான தூக்கு தண்டனை தீர்ப்பை மதிமுக வரவேற்கிறது என வைகோ பேட்டி

கோவை, டிசம்பர் 13

சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளதை மதிமுக வரவேற்கிறது என கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வைகோ, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கொளத்தூர் நகைக் கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் சென்ற மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுட்டு கொள்ளப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

மதிமுக எப்போதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளது. ஆனால், உடுமலை சங்கர் உள்ளிட்ட ஆணவ படுகொலைக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதனை மதிமுக வரவேற்கிறது. இதேப்போன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு அநீதியே அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது வழக்கில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தமிழக அரசு ஏற்கனவே முன்மொழிந்தது போல இவர்களை விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...