ஜெயலலிதா மரண விவகாரம் : அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரம் விசாரணை

டிசம்பர் 14

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம்  4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை விசாரணை ஆணையம் முன்பு திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவர் நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் மருத்துவர் சங்கர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவர்கள் தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, தீபக் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அது தொடர்பான விளக்கங்களை தீபக்கிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். அப்போது, பல்வேறு தகவல்களை நீதிபதியிடம் அவர் கூறினார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை முடிந்த பின் அது குறித்து தீபக் கூறியதாவது:-  ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்த சந்தேகங்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன். சந்தேகம் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அனைவரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளேன். என்றார். 

Newsletter

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...