ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் ”ICICT 17”

கோவை, டிசம்பர் 15

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினியியற்புலத்தின் சார்பாக ”ICICT 17” என்ற சர்வதேச அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்ற இந்தச் சர்வதேச கருத்தரங்கினைக் கல்லூரியின் முதல்வர் & செயலர் கு.கருணாகரன் தொடக்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமங்களின் இயக்குநர் ஏ. எபினேசர் ஜெயக்குமார் தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் அபுபக்கர் முகம்மது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கு.கருணாகரன் கூறுகையில், கணினி என்பது செயற்கை நுண்ணறிவு. இவ்வறிவானது சுற்றுச்சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் செயலாற்றி வெற்றியின் இலக்கை அடைய எடுக்கப்படும் முயற்சி. என்றார். மேலும், அவர் செயற்கை நுண்ணறிவு ஆய்வைத் தற்கால புதிய முறையிலான கணினி ஆய்வுடன் ஒப்பிட்டுப் பேசினார். பாரம்பரிய நம்பிக்கை, கற்பனை, தத்துவம், செயற்கை நுண்ணறிவின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கான நியாயவாதம், சிக்கல் தீர்க்கும் திட்டமிடல், கற்றல், இயற்கை மொழிகள் செயலாக்கம், படைப்பாற்றல் ஆகியவற்றை விளக்கினார். 

சிறப்பு விருந்தினர் தனது உரையில் கணினி சார்ந்த முக்கியத்துவத்தைச் சிறப்பித்துக் கூறினார். பொதுவாக மனித இயல்பால் நிகழ்த்தப்படும் சிக்கல், தெளிவான தாக்கம், சிக்கலான இணைப்பு, கணினியின் பரிணாம வளர்ச்சி பற்றிய பல்வேறு கோட்பாடுகளை விளக்கினார். மருத்துவம், வாழ்க்கை அறிவியல், தொடர்புக் கட்டுப்பாட்டு பயன்பாடுகள், பாதுகாப்பு, காப்புரிமை, பொருளாதாரம், நிதிநிலை, பசுமை தொழில்நுட்பம், அரசு, வேளாண்மை, போக்குவரத்து போன்ற துறைகளில் கணினியின் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டார். 

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...