கள்ள நோட்டுக்கள் கொடுத்து ஆட்டு வியாபாரத்தில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமிகள் கைது


திருப்பூர், டிசம்பர் 16

திருப்பூரில் விவசாயிகளை குறி வைத்து நூதன முறையில் கள்ள நோட்டுக்கள் கொடுத்து ஆட்டு வியாபாரத்தில்  ஈடுபட்ட கோவையை சேர்ந்த  டிப்டாப் ஆசாமிகள் இருவர்  கைது.

திருப்பூர் மாவட்டத்தை அடுத்த பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி, விவசாயியான இவர் ஆடு,மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை அருகில் உள்ள செட்டிபாளையம் சாலையில் மேய்த்துகொண்டிருந்த போது காரில் வந்த டிப் டாப் இளைஞர்கள் இரண்டு பேர் வேலுச்சாமியிடம் சென்று ஆடுகளை விலைக்கு கேட்டுள்ளனர். 

அதன் பின்னர் விலை குறித்து பேசிவிட்டு பின்னர் 5 ஆடுகளுக்கு ரூபாய் 28 ஆயிரம் பேசி முடித்து ஆடுகளை காருக்குள் ஏற்றிவிட்டு பின்னர் 28 ஆயிரம் பணத்தை வேலுச்சாமியிடம் கொடுத்துள்ளனர். 

வேலுச்சாமி பணத்தை கையில் வாங்காமல் உறவினரை அழைத்து அவரிடம் கொடுக்க சொன்னதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பணத்தை கையில் வாங்கிய உறவினர் 2000 ரூபாய் நோட்டுக்கள் மீது சந்தேகம் வந்ததை அடுத்து இருவரிடமும் விசாரிக்க துவங்கியுள்ளார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத இருவரும் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் காரை தடுத்து நிறுத்தி இருவரையும் சுற்றி வளைத்தனர். இருப்பினும் இருவரும் தப்பி ஓட முயற்சித்த போது அப்பகுதில் இருந்த நாய் துரத்தியதை அடுத்து இருவரும் ஓட முடியாமல் பொதுமக்களிடம் சிக்கினர். 

பின்னர் இருவரையும் பிடித்த பொதுமக்கள் அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரையும்  கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். 

போலீசார் விசாரணையில் பிடிபட்டவர்கள் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தாபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் கார்த்திகேயன் என்பதும் தெரிய வந்தது.

மேலும் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. பிடிபட்ட இருவரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் மிக்ஷினில் நகல் எடுத்து தத் ரூபமாக அசல் ரூபாய் நோட்டுக்கள் போல் தயாரித்து பின்னர் கிராமங்கள் தோறும்  டிப்டாப்பாக சென்று இருவரும் விவசாயிகளை குறி வைத்து ஆடுகளை மேய்த்து கொண்டிருப்பவர்களிடம் சென்று ஆடுகளை விலை பேசி காரில் ஏற்றிவிட்டு, பின்னர் அவசர அவசரமாக கேட்ட தொகையை கள்ள நோட்டுக்களாக கொடுத்துவிட்டு அங்கிருந்து நலுவி சென்றுவிடுவர்கள்.

மேலும் போலீசார் விசாரணையில் சரவணம்பட்டியில் உள்ள இருவரின் வீட்டிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் இயந்திரம்  ,மற்றும் உபகரணங்களை கைபற்றிய போலீசார் அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் பட்டதாரி வாலிபர்களான சங்கரும்,கார்த்திகேயனும் தனியார் நிறுவனத்தில் தாங்கள் பார்த்து வந்த பதவியை உதறிவிட்டு ஒரு ரூபாய் செலவில் ஜெராக்ஸ் எடுத்து பத்தாயிரம் வரை எந்த வித செலவும் இல்லாமல் விவசாயிகளையும் ஆட்டுவியாபாரிகளையும் குறிவைத்து டிப்டாப்பாக சென்று மோசடியாக ஆடுகளை வாங்கி தாங்களே சொந்தமாக கறிக்கடை வைத்து வெட்டி விற்பனை செய்து வந்தது பொதுமக்களிடையேயும், விவசாயிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கைது செய்யப்பட்ட இருவரும் பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருக்ஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தவிட்டத்தை தொடர்ந்து இருவரையும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...