தமிழ் அறிஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்

கோவை, டிசம்பர் 17

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும், தமிழை வளர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 5-ம் ஆண்டு விழா இன்று கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 50௦-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவிற்கு அவ்மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை வகித்தார். அவர் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், ” உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் சிறந்த மொழி, பழமையான மொழி, செம்மொழி தமிழ் தான். பல நாடுகளில் உள்ள தொன்மையான மொழிகள் அழிந்துவிட்டன, அதில் சில நாடுகளில் மட்டுமே தாய் மொழியை மீட்டெடுக்க மக்கள் பாடுபட்டு அவர்களது தாய் மொழியை மீட்டெடுத்துள்ளனர். இதுபோன்ற நிலைமை தமிழுக்கு வந்துவிட கூடாது என்பதற்காக இவ்மையம் உருவாக்கப்பட்டது.

தமிழை காப்பாற்ற தமிழர்கள் முடிந்த வரையில் தங்கள் இல்லங்களில் தமிழ் பேசவேண்டும், குழந்தைகளை தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். சில பள்ளிகூடங்களில் பள்ளி வாளகம் மட்டுமின்றி மாணவர்கள் வீட்டுக்கு சென்றால் கூட அங்கேயம் ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும்.

தமிழை காக்க தமிழுக்காக பாடுபடும் தமிழ் அறிஞர்களை பாராட்டி ஊக்கம் அளிக்கம் வேண்டும் அதனை இவ்மையம் செய்து வருகிறது,” என்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் கலந்துகொண்டு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ் தாத்த உ.வே.சா தமிழறிஞர் விருது முனைவர் சிலம்பொலி செல்லப்பனாருக்கும், தமிழ்ப் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணநிலனனுக்கும், டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுரைத் தமிழ் தொண்டன் விருது முனைவர் க. மணி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.

நீதியரசர் ஆர். மகாதேவன் பேசுகையில், ” அக்காலத்தில் தமிழுக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களை அவர்கள் வாழும் காலத்தில் போற்றப்படவில்லை ஆனால் தற்போது அவர்களை நாம் போற்றுகிறோம். தமிழுக்காக பாடுபடுவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்கள் வாழும் காலத்திலேய போற்ற வேண்டும் அந்த பணியை இவ்மையம் சிறப்பாக செய்துள்ளது,” என்றார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...