கோவை மாநகராட்சியின் வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி பொதுமக்கள் மனு

கோவை, டிசம்பர் 18

கோவை மாநகராட்சியில் குடிநீர், குப்பை உள்ளிட்டவற்றிற்கு வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் 85-வது வார்டு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் உயர்த்தப்பட்ட குப்பை வரி, கூடுதல் குடிநீர் வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை ரத்து செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவை மாநகராட்சி 85-வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வைப்புத் தொகை அதிகரிப்பு மற்றும் குப்பை வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, குடிநீர் வைப்புத் தொகையாக ரூ. 4 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பைகளைச் சுத்தம் செய்யவும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கூடுதலாக மாநகராட்சி வரி வசூல் செய்வது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைகிறது.  எனவே, மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற வரி உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...