பண்டிகை காலத்தையொட்டி சலுகை விலையில் டிக்கெட்டுகளை அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்

கோவை, டிசம்பர் 19

பண்டிகை காலம் மற்றும் 200 மில்லியன் பயணிகளைக் கவர்ந்ததைக் கொண்டாடும் வகையில் சலுகை விலையிலான டிக்கெட்டுகளை இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. 

இண்டிகோ, ஏர்இந்தியா போன்ற நிறுவனங்கள் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் அதிகளவு ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டும், இதுவரை உள்நாட்டில் 200 மில்லியன் பயணிகள் விமானச் சேவையைப் பயன்படுத்தியது கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை இண்டிகோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி, டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரூ.999-க்கும், சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு ரூ.1,120-க்கும் விமான டிக்கெட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல, பக்தோக்ரா - கவுகாத்திக்கு ரூ.1005-க்கும்,  கோவை - சென்னைக்கு ரூ.1,095, ஜம்மு - காஷ்மீருக்கு ரூ.1,122க்கும் அகர்தலா - கவுகாத்தி ரூ.1,130-க்கும், சென்னை - கோவைக்கு ரூ.1,148-க்கும்,  கொச்சி - சென்னைக்கு ரூ. 1,212க்கும், விசாகப்பட்டினம் - ஐதராபாத்திற்கு ரூ.1,259 -க்கும் விற்கப்படுகிறது. 

அத்துடன் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் பெறப்படும் விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.200 கட்டணம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை டிக்கெட்டுகளானது அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மட்டுமே என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...