தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் மாணவர்கள்


கோவை, டிசம்பர் 19

கோவை  வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தாததால் மதியம் வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில் வங்கி கடன் வாங்கி படிக்க வந்துள்ளோம் இந்நிலையில் முதல் முறை மறு தேர்வு எழுத 1000 ருபாய் இரண்டாம்.முறைக்கு 2000 ஆயிரம் அதையே மூன்றாம் முறையாக எழுத வேண்டியது எனில் 3000 கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இது தங்களை பெரிதும் பாதிக்கும் என தெரிவித்தனர். 

தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வாங்கும் நிலையில் தற்போது அரசு கல்லூரி  நிர்வாகமும் கட்டண கொள்ளையில் ஈடுபடுகிறது எனவும் மாணவர்கள் கூறினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக்கழக முதன்மையர் மகிமைராஜா மற்றும் பதிவாளர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து பதிவாளர் சுதாகர் கூறுகையில் தேர்வு கட்டணம் 200 ருபாயாக இருபதால்  மாணவர்கள் தேர்வு எழுத வருவதில்லை மேலும் தேர்வில் தோல்வியடைந்தால் பெற்றோர்களிடம் கூறாமல் அஜாக்கிரதை போக்குடன் இருப்பதால் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...