வால்பாறை அருகே யானைகளுக்கு இடையே மோதல் : பலத்த காயமடைந்த பெண் யானை மரணம்

கோவை, டிசம்பர் 20

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்தக் காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக உணவிற்காக அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி வரத்தொடங்கின. குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் சத்துணவுக்கூடம், ரேசன்கடை, குடியிருப்புகள் போன்றவற்றை சூறையாடுவதுடன், அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் நாசம் செய்து வந்தது. வனத்துறையினரும், பொதுமக்களும் இரவு முழுவதும் உறங்காமல் காட்டு யானைகளைக் காட்டுப்பகுதிக்குள் விரட்டினார்கள். இருப்பினும், அந்தக் காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. 

தற்போது, யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதால், காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி அருகில் பெண் யானை ஒன்று பலத்த காயங்களுடன் அடி வயிற்றில் குடல் வெளிவந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் மற்றும் வேட்டைத்தடுப்பு ஊழியர்கள் இறந்த யானையின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், வனவிலங்குகள் கால்நடை மருத்துவர் மனோகரன் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தார். 

அதன் பின்னர் கால்நடை மருத்துவர் மனோகரன் கூறியதாவது: இறந்த பெண் யானைக்கு சுமார் 31 வயது இருக்கும். இப்போது யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில் அது உயிரிழந்துள்ளது. ஆண் யானை தந்தத்தால் தாக்கியதால் அதன் அடி வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது. காயம் ஏற்பட்ட பெண் யானை ஓரிரு நாட்கள் உயிருடன் இருந்திருக்கலாம். அதன் பின்னர் ரத்தம் முழுவதும் போன பிறகு உயிரிழந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இறந்த பெண் யானையின் உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பின் வனவிலங்குகளுக்கு இரையாக வெட்டி அப்பகுதியிலேயே இடப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...