”மாடித்தோட்டம் குறித்த தேசிய அளவிலான தொழில் பயிற்சிப்பட்டறை”

கோவை, டிசம்பர் 20

பாரதியார் பல்கலைக்கழகத் தாவரவியல் துறை சார்பில் “மாடித்தோட்டம் - அம்சங்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.



தாவரவியல் துறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் தலைவர் பேராசிரியர் அ. ராஜேந்திரனின் வரவேற்புரையுடன் விழா துவங்கியது. பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கணபதி பயிற்சிப்பட்டறையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும் உரையாற்றினார். அவரது உரையில், பல்கலையில் அறிவியல் முன்னேற்றத்திற்கும் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க வளர்ச்சிகளை விவரித்தார். அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் கி.சித்ரா, தொழில் பயிற்சிப் பட்டறை குறித்து முகவுரை ஆற்றினார் 

பின்னர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சிப் பட்டறையில் மாடித்தோட்டம் அமைக்கும் செயல்முறைகள், பராமரிப்பு, தாவரங்கள் தேர்வு, இயற்கை உரமிடுதல் குறித்து பயனுறு பயிற்சி அளிக்கப்பட்டது. பதிவாளர் சு. சரவணசெல்வன் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கினார். முனைவர் கூ.சேகர் பயிற்சிப் பட்டறையின் நிறைவுக் கருத்துக்களை தொகுத்து வழங்கினார். முனைவர். மு.வசந்த் நன்றியுரையுடன் பயிற்சிப் பட்டறை நிறைவுபெற்றது. தேசிய அளவிலான தொழில் பயிற்சிப் பட்டறையில் 35-க்கும் அதிகமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியா முழுவதும் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...