தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ரஜினிகாந்த் : தமிழருவி மணியனுடன் மீண்டும் சந்திப்பு

டிசம்பர் 22

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தமிழருவி மணியன் இன்று ஆலோசனை நடத்தினார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக ரசிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடி தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, ரஜினி அரசியலில் கால்பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.  இதனையடுத்து ரஜினி தீபாவளியன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுவார், காலா படப்பிடிப்பிற்கு பிறகு அரசியலுக்கு வருவார், 2.0 பாடல் ரிலீசுக்குப் பிறகு அரசியலுக்கு வருவார் என்று பல தகவல்கள் வெளியாகின.

கடைசியாக அவருடைய பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். வருகிற 26-ந்தேதி தொடங்கி 31 ந்தேதி வரை 6 நாட்கள் தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தின் போது ரஜினி அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பான காலகட்டத்தில், தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் பேச்சாளருமான தமிழருவி மணியனை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதே போன்று, இன்றும் தமிழருவி மணியனை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த்தால் தான் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியும். அவரும் கமலும் அரசியலுக்கு வந்தால் புதிய அரசியல் பாதை உருவாகும் என்று சொல்லி வருகிறார் தமிழருவி மணியன். ரசிகர்களை சந்திக்கும் நிலையில், ரஜினி நடத்தும் இந்த ஆலோசனையில் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...