”வாக்காளர் அடையாள அட்டைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை”

கோவை, டிசம்பர் 23

வாக்காளர் அடையாள அட்டை வழங்கக் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் ஈ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்குக் கட்டணமாக பொதுமக்கள் ரூ.25 மட்டும் செலுத்தினால் போதுமானது. வாக்காளர் அடையாள அட்டைப் பெற உரிய கட்டணத்திற்கு மேல் செலுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

யாராவது அதிக பணம் பெறவது தெரியவந்தால், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. யாராவது அதிக கட்டணம் செலுத்துமாறு கேட்டாலோ, அட்டைபெறுவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டாலோ, பொதுமக்கள் ஈ-சேவை மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர்கள், தேர்தல் தனிததுணை வட்டாட்சியர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...