பணப்பட்டுவாடா புகார் எழுந்தும் தேர்தலை நிறுத்த தவறியதாக தேர்தல் ஆணையத்தின் மீது சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டு

கோவை, டிசம்பர் 25

பணப்பட்டுவாடா புகார் எழுந்தும் தேர்தலை நிறுத்த தவறியதாக தேர்தல் ஆணையத்தின் மீது தேசிய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 93- வது பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

பின்னர், சவுரிபாளையம் மற்றும் உப்பிலியபாளையம் ஆகிய பகுதிகளில் தேசிய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதா கிருஷணன் பா.ஜ.க. அலுவலகங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பணப்படுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையம் இந்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யத்தவறிவிட்டது.

பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய முன்வரமாட்டார்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது.

எதிர்காலங்களில் கடுமையான தேர்தல் விதிமுறைகள் கொண்டு வந்தால் தான் ஜன நாயகம் வெல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...