பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் தீவிபத்து : போலீஸார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் சி.எம். நகரில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்குச் சொந்தமான கழிவுப்பஞ்சு குடோன் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு புகை வருவதைக் கண்ட தொழிலாளர்கள் உடனடியாக குடோனில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், தனியார் தண்ணீர் லாரிகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். 

குடோனில் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், எவ்வாறு தீ விபத்து நிகழ்ந்தது என பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீவிபத்து ஏற்பட்டது குறித்த தகவல் கிடைத்து சுமார் 20 நிமிடம் காலதாமதமாக பல்லடம் தீயணைப்பு துறையினர் வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.  

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...