வடமாநில கொள்ளையர்களை கோவை போலீஸார் கைது செய்தது எப்படி..? மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார்.

கோவை: கோவை அருகே பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி விளக்கியுள்ளார். 

அன்னூர் அருகே உள்ள கனுவக்கரையில் கடந்த 26-ம் தேதி ராஜாமணி என்பவரை கொலை செய்த வடமாநில இளைஞர்கள், அவரது கணவர் மயில்சாமிக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றனர். பின்னர், வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ஒரு லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, அன்னூர் போலீஸார் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மேற்குவங்கம் சென்றனர். கொள்ளையர்கள் சாம்ராடசகா, பிண்டு மாலிக், அஜய்ராய் ஆகியோரை அம்மாநில போலீசார் உதவியுடன் கைது செய்தனர். 

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பெண்ணைக் கொலை செய்த இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் சென்றனர். அங்கிருந்து சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றனர். அவர்களின் ஒரு செல்போன் எண்ணை வைத்து மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீசார், அம்மாநில போலீசார் உதவியுடன் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

இவர்கள், மூன்று பேர் மீதும் கோவை மாவட்டத்தில் வேறு குற்ற வழக்குகள் இல்லை, வேறு எங்காவது உள்ளதா..? என விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துபவர்கள் அவர்கள் குறித்து முழு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, மேற்குவங்கம் சென்ற தனிப்படை போலீஸார் தேவையான ஆயுதங்களுடன் சென்றதாகவும், அம்மாநில போலிசாருடன் இணைந்து செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிக்க முடிந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...