ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் இலவச பரிசோதனை முகாம் 4-ம் தேதி தொடக்கம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச பரிசோதனை முகாம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது.

கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச பரிசோதனை முகாம் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படுகிறது. 

ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சிமையம் கடந்த 15 ஆண்டுகளாக துண்டு பிரசுரங்கள், இலவச புற்றுநோய் முகாம், கண்காட்சி, தொலைபேசி, செல்போன் வாயிலாக பிரச்சாரங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் புதிய யூடியுப் சேனல் தொடங்கப்படுகிறது. மேலும், இந்த மாதம் முழுவதும் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அந்த மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் கூறியதாவது, இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம், விரிவான விளக்கங்களை பிப்.,4-ல், உலகிலேயே முதல் முறையாக யூடியுப் சேனலில் படக்காட்சிகளை வெளியிடுகிறது.

உடலில் பல்வேறு வகையான புற்றுநோய்கள், தலை, கழுத்து, கடைபெருங்குடல், மூளை, வயிறு, வெள்ளையணு பிளாஸ்மா, ரத்தத்தில் சேரும் தேவையற்ற செல்களின் வளர்ச்சி, கணைய புற்றுநோய், கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற 14 வகை புற்றுநோய்க்கு தலா ஒவ்வொன்றுக்கும் 7 விளக்கங்கள் தரப்ட்டுள்ளன. புற்றுநோய்க்கான காரணிகள், சிகிச்சை முறை, வருமுன் காக்கும் முறைகள், தடுப்பு முறைகள் பற்றி இடம்பெற்றுள்ளன. 

மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் வரும் 4-ம் தேதி தொடங்கும் விந்தகப்பை சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் பரிசோதனை மற்றும் அல்ட்ராஸ்கேன் சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை மாதம் முழுவதும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...