பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ”குளச்சவாரி”

சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

கோவை: சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

சதுப்பு நில தினத்தையொட்டி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையானது (இ.எப்.ஐ.,), பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குளச்சவாரியை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கோவையில் உள்ள முக்கிய ஏரிகளில் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  இதில், முத்தன்னன் குளத்தில் தொடங்கிய இந்த சவாரி, செல்வம்பதி குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளத்தில் முடிவடைந்தது. இந்த சவாரியின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒன்றிப் போகும், புவியியல், நீர் இயல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இ.எப்.ஐ., என்ற பக்கத்தில் விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுமார் 3 மணி நேரம் கொண்ட இந்த சவாரியானது இலவசமாக செய்து தரப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...