திருப்பூரில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல் கால்கோல் நாட்டினார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் அலகுமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.



தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, காங்கேயம், வெள்ளகோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற உள்ளது". 

இதற்காக தற்போதே 500-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில், அனுபவம் வாய்ந்த மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். காளைகளை முறையாகப் பரிசோதிக்க 18 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் கூறினார். 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...