திருப்பூரில் கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்

திருப்பூரில் தனியார் கல்லூரி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் தனியார் கல்லூரி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.



திருப்பூர் மூத்தூர் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. அங்கு பயின்றுவரும் மாணவர்கள் தினந்தோறும் அக்கல்லூரியின் பேருந்தின் மூலமாக கல்லூரிக்கு செலவது வழக்கம். 

இந்த நிலையில், வழக்கம் போல இன்றும் திருப்பூரிலிருந்து மூத்தூருக்கு கல்லூரி பேருந்தில் மாணவர்கள் சென்றனர். பேருந்தை கருப்பசாமி என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து கூலிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. 

இதனால், பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விபத்தினால் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர். 

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...