சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்

சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கோவை : சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 



கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சாலையோர திருவிழா வியாபாரிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் தேவராஜ் பேசுகையில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாகக் கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை சிறப்பு முகாம்கள் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்க ஆவண மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். அது, தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...