பாரதியார் பல்கலை., பதிவாளர் அறையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வனிதா அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வனிதா அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

பேராசிரியர் நியமனத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை முன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் துணைவேந்தர் கணபதியை கண்காணித்து வந்தனர். அன்றைய தினம், சுரேஷிடம் இருந்து கணபதி பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து, அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, கணபதியை வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணி இடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் வனிதா அறையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...