நீலகிரியில் பெய்த சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்த லேசான மழையின் காரணமாக ஏற்பட்ட சீதோஷன நிலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த லேசான மழையின் காரணமாக ஏற்பட்ட சீதோஷன நிலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த கால நிலை நிலவி வருகிறது. மேலும், தற்போது, நிலவி வரும் சீதோஷன நிலையால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 152.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாகக் குந்தா பகுதியில் 31 மி.மீ. மழையும், குறைந்த பட்சமாக உதகையில் 1 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பதிவான மழையின் அளவு பின்வருமாறு : குன்னூர் 19 மி.மீ. கூடலூர் 1 மி.மீ. குந்தா 31 மி.மீ. கேத்தி 4 மி.மீ. கோத்தகிரி 9.20 மி.மீ. நடுவட்டம் 2 மி.மீ. உதகமண்டலம் 1 மி.மீ., கல்லட்டி 1 மி.மீ., கிளன்மார்கன் 4 மி.மீ., அப்பர் பவானி 6 மி.மீ., எமரால்டு 8 மி.மீ., அவலாஞ்சி 9 மி.மீ., கெத்தை 24 மி.மீ., கின்னக்கொரை 24 மி.மீ., தேவாலா 1 மி.மீ., பர்லியாறு 8 மி.மீ., மொத்த அளவு 152.20 மி.மீ., சராசரி அளவு 8.95 மி.மீட்டராகும்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...