ஜீயரின் உண்ணாவிரதப் போராட்டத்தை விமர்சித்து ’உண்ணும்’ போராட்டம்

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.



தமிழர்களுக்கு எதிராகக் கலவரத்தை தூண்டும் வகையில் உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரைக் கண்டித்து த.பெ.தி.க.வினர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு டேபிள் சேர் போட்டு உணவுப் பொருட்களை வைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜீயருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், வைரமுத்து மன்னிப்பு கேட்க மாட்டார் என்று கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் ஜீயர் தேவையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுகிறார். இது அரசியல் சூழ்ச்சி. தோல்விகளை மறைக்க ஜீயரைப் பயன்படுத்தி மத பிரிவினையை உருவாக்க சிலர் முயற்சிக்கிறனர்" என்றார்.



Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...