துணைவேந்தர் திறமையின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை - துரைமுருகன்

துணைவேந்தர் திறமையின் அடிப்படையிலோ அல்லது கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை என்று தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: துணைவேந்தர் திறமையின் அடிப்படையிலோ அல்லது கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை என்று தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற உள்ள திமுக மண்டல மாநாட்டு பணிகளை பார்வையிடச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகன் கோவை வந்தார். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், " காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. சாகப்போகும் நிலையில் சங்கரா என கூறுவதைப்போல, பயிர்கள் காய்ந்து விட்ட இந்த நிலையில் கர்நாடகா முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறுகின்றார்கள். கர்நாடகா முதல்வர் தேர்தலில் முனைப்புடன் உள்ளார். இப்போது அவரை பார்க்க நினைப்பதை முன்னரே செய்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது எவ்வளவு நீர் இருப்பு உள்ளது காவிரி டெல்டா பகுதியில் ஏக்கருக்கு எவ்வளவு டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது? என அரசுக்கு தெரியுமா.?

ஆண்டாள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரச்சனையில் வைரமுத்து பெருந்தன்மையோடு மன்னிப்பு கேட்டு விட்டார். இருப்பினும் ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றுதான் கூற முடியும். லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் திறமையின் அடிப்படையிலோ, கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளோடு தான் வந்துள்ளனர்" என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...