மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனுக்கு தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். மீனாட்சி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், தீவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி கோயிலுக்குள் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தவிர பார்வையாளர்கள், பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது. கோயிலுக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த வேண்டும். நவீனரக தீ தடுப்பு சாதனங்களை அமைக்க வேண்டும். இதனைக் கையாள்வது குறித்து ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மீனாட்சி கோயிலில் இருந்து 1 கி.மீ., சுற்றளவுகளில் 9 மீட்டர் மேல் உயரமுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும்.

மேலும், கோயிலில் அதிக அளவில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் முழு மின் இணைப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறியதுடன், இது குறித்து பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...