ஜெயலலிதா மரண விவகாரம்: இளவரசியின் மகன் விவேக்கிற்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயா டிவியை நிர்வகித்து வரும் இளவரசியின் மகன் விவேக்கிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்தனர். பின்னர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இளவரசியின் மகனான விவேக் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 13ஆம் தேதி விவேக் ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் வரும் 12-ஆம் தேதி முதல் மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அடுத்தவாரம் 4 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் ஜெயலலிதாவுடன் நீண்ட நாட்கள் இருந்தவர் என்பதால் அவரிடம் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 12-ம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துகிறது. அப்பல்லோ மருத்துவர் பாலாஜியை வரும் 14-ம் தேதியும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை 15-ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...