வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்கம் : யானை சவாரி ரத்து

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி : முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். 



தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம் அரசு நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த முகாம், முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதால், கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு உட்பட்ட தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டது. இந்த முகாம் காலகட்டமான 48 நாட்கள் கோயில் மற்றும் மட யானைகளுடன் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும் ஓய்வு அளிக்கப்படும். இந்நிலையில், இந்தாண்டு 10-வது நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியது

.

முகாமை முன்னிட்டு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள முதுமலையில் (22), ஆனைமலையில் (23), அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் (4), சேலம் குரும்பர்பாடியில் (1) மற்றும் சாடிவயலில் (2) என மொத்தம் 52 வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுகிறது. மதியம் முதுமலை தெப்பக்காட்டில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமையொட்டி, யானைகளுக்குக் கரும்பு, வாழை, தேங்காய் உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, ‘முகாம் மார்ச் மாதம் 28-ம் தேதி வரை நடக்கும். இதற்காக ரூ. 61.016 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் காலதாமதாக இன்று தொடங்கப்பட்டது.’ என்றார். 

யானைகள் நலவாழ்வு முகாமை முன்னிட்டு நேற்று முதல் யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால், முதுமலை வரும் சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் மூலம் மட்டுமே சுற்றி பார்க்கலாம். முகாம் தொடக்க விழாவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, வன அலுவலர்கள் ராஜ்குமார், பி.கே.திலீப் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...