வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் : உடலை தேடும் பணி தீவிரம்

திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



பொங்கலூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். கூலி தொழிலாளியான இவருக்கு தர்ணீஸ் என்கிற மகனும், மகளும் உள்ளனர். மேலும், தர்ணீஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், இன்று பள்ளிக்கு செல்லாமல் மதியம் சுமார் 1 மணி அளவில் அருகில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தனது தாத்தா முருகனுடன் குளிக்க சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கரை ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளான். 

இதனைக் கண்ட அவனது தாத்தா முருகன் அதிர்ச்சி அடைந்து தர்ணீஸை காப்பாற்ற முயன்ற போது, நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான். பின்னர், இது குறித்து உறவினர்களுக்கும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் பொதுமக்கள் துணையோடு தர்ணீஸின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்குத் தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...