குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அண்மையில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 189.57 மதிப்பில் குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில், குடிநீர் விநியோகம் அபிவிருத்தி பணிகள் மற்றும் பில்லூர் 3 திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியிளர் மதியழகன், தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாகப் பொறியாளர்கள் ரங்கராஜன், சம்பத்குமார், மாநகராட்சி பொறியாளர்கள் நடராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...