தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

திருப்பூர்: தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை இன்று காலை மாநகர காவல்துறை துணை ஆணையர் கயல்விழி தொடங்கி வைத்தார். 



இந்நிகழ்ச்சியில், மாறுவேடம் அணிந்த கல்லூரி மாணவர்கள் தற்கொலை வேண்டாம் என்பது குறித்த நாடகம் நடத்தி சக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



மாணவர்கள் நடத்திய சைக்கிள் பேரணி சிக்கண்ணா கல்லூரியில் தொடங்கி, புஷ்பா தியேட்டர் வரை சென்று முடிந்தது, இந்த விழிப்புணர்வு பேரணியில், ‘தற்கொலை ஒரு கோழைத்தனம்’,  ‘தனிமையைத் தவிர்ப்போம்’, ‘தற்கொலையை வென்றெடுப்போம்’  போன்ற விழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்திச்சென்றனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...