மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நடத்துவதில் நிர்வாகிகளிடையே மோதல்

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அறக்கட்டளைக்கு முருகசாமி என்பவர் மாற்றுத்திறனாளி தலைவராக உள்ளார். இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, பழைய நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்ற முருகசாமி, இதுகுறித்து புதிய நிர்வாகிகளிடம் கேட்டு, பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பள்ளியின் மாணவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸார் இருதரப்பினரையும் விசாரித்து காவல்நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...