தீபா வீட்டிற்கு வந்த டுபாக்கூர் வருமான வரித்துறை அதிகாரி தப்பியோட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா மீது போலீஸில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டிற்குத் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்று கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தார். அவர் கையில் வாரண்டு மற்றும் ஐடி ஆகியவை வைத்திருந்ததாகத் தெரிகிறது. 

அவர் மீது தீபா வீட்டில் இருந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்படவே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், வருமான வரித்துறை என்று கூறி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினார். 

காவல் துறை அதிகாரிகள் அவரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் அருகில் இருந்த வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த அந்த நபர் மாயமானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...