தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு தீவிரம் : மத்திய அமைச்சர்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார். 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை இன்று திறந்து வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''ஏழைகளுக்குக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெயர் துறவி ராமகிருஷ்ணாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் மக்களின் மருத்துவத்திற்காக ரூ. 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மோடி தலைமையிலான அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்துகிறது. இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் ஏழைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 

தமிழகத்தில் வேகமாகப் பரவி வந்த டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன்.” இவ்வாறு கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...