ஐ லீக் கால்பந்து போட்டி : வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்

கோவையில் நடைபெற்று வரும் ஐ லீக் கால்பந்து போடியில் நடுவர்களின் சில தவறான முடிவுகளால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்று வரும் ஐ லீக் கால்பந்து போடியில் நடுவர்களின் சில தவறான முடிவுகளால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவின் தலைசிறந்த 10 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை வ.ஊ.சி. மைதானத்தில் சென்னை கால்பந்து அணிக்கு எதிராக ஷிலாங் கால்பந்து அணி மோதுகிறது.



இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஷிலாங் அணி பயிற்சியாளர் பாபி நாங்பெட் பேசுகையில், "நாளை நடைபெறும் போட்டிக்கு எங்கள் அணி வீரர்கள் மனதளவில் தயாராகவிட்டனர். கோவையில் முதன் முறையாக நாங்கள் விளையாடுகிறோம். கடந்த முறை சென்னை அணிக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. மேலும், எந்த ஒரு அணிக்கும் வெளி மைதானங்களில் விளையாடும் போது சவாலாகத் தான் இருக்கும். ரசிகர்கள் எப்போதும் தங்கள் சொந்த அணி விளையாடும் போது அந்த அணிக்கு ஆதரவளிக்கும் போது வீரர்கள் உற்சாகத்துடனும் வெற்றி முனைப்புடன் விளையாடுவார்கள். எங்கள் அணி ஹீரோ ஐ லீக் போட்டிகளில் வெற்றி தோல்வி என மாறி மாறி புள்ளிகள் அடிப்படையில் பின் தங்கிவிட்டது. இனி வரும் போட்டிகளில் புள்ளிகள் அடிப்படையில் முன்னேற முயற்சிப்போம்" என்றார்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தராஜன் பேசுகையில், "அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால் வெற்றி பெற முடியாமல் திணறி வருகின்றனர். சொந்த மைதானத்தில் ஒரு வெற்றி கூட பெறாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நடுவர்களின் சில தவறான முடிவுகளால் எங்கள் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாளைய போட்டியில் ஷிலாங்க எதிரான போட்டியில் சென்னை அணிக்கு வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. காலநிலை எங்களுக்குச் சாதகமானதாக உள்ளது.

மேலும் காயம் காரணமாக நாளைய போட்டியில் அணியின் கோல்கீப்பர் யூரோஸிற்க்கு பதிலாக கபீர் விளையாடுவார். அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கொரிய வீரர் கிம் மற்றும் செர்பிய வீர்ர் அலெக்ஸ் சிறப்பாக விளையாடுகின்றனர். வீரர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு நாளைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வரும் போட்டிகளில் வெற்றி இலகுவாக அமைய வாய்ப்புள்ளது" என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...