உழவர் தினவிழா 2018 மற்றும் புதிய பயிர் இரகங்கள் வெளியீட்டு விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று  நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விவசாயம் சார்ந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவிகளையும், புதிய பயிர் ரகங்களையும் அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வெளியிட்டனர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. வேளாண் செம்மல் விருது, புதிய கண்டுபிடிப்பாளர் விருது, சிறந்த பெண் விவசாயிகளுக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.



உழவர் தின விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், சிறந்த பல்கலைக்கழகமாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், காங்கேயத்திலிருந்து கேரளாவிற்கு வரும் தேங்காய் எண்ணெய்கள் தரமற்று இருப்பதாகக் கேரளா அமைச்சர் சைலஜா கூறி இருப்பது தவறான தகவல். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் எண்ணெய், காய்கறிகள் என அனைத்தும் தரமானவை. மேலும், கோவை மாநகராட்சியில் கான்ட்ரெக்ட் எடுத்து செய்யும் வேலைகளில் பல கோடி முறைகேடு என்ற குற்றச்சாட்டிலும், எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு கூறினார்.  எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.



Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...